திருநங்கைகளுக்கும் பல்வேறு மாநில அரசுகளும், மத்திய அரசும் பல சலுகைகளையும் அறிவித்து வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் திருநங்கைகளுக்கு மலிவு விலையில் வீடு வழங்கும் திட்டத்தை மாநில சமூக நலத்துறை அறிவித்துள்ளது. அதன்படி இதன் முதல் கட்டமாக நாக்பூர் நகரில் உள்ள திருநங்கைகளுக்கு 450 சதுர அடியில் 150 அடுக்குமாடி குடியிருப்புகளை வழங்க திட்டமிட்டுள்ளது. இதன்படி பயனாளிகள் பிளாட் விலையில் 10 சதவீதம் மட்டுமே செலுத்தினால் போதும். மீதமுள்ள தொகை பிரதமர் வீடு கட்டும் திட்டம் மற்றும் மாநில அரசு நிதியில் இருந்து செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
Categories