Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ்…. சபரிமலை பக்தர்களுக்கு கூடுதல் தளர்வுகள்…. வெளியான புதிய அறிவிப்பு….!!!!

பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்ப சுவாமி கோவிலில் மண்டல கால மகர விளக்கு பூஜைகள் நவம்பர் மாதம் 16-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. சென்ற ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக குறைந்த அளவு பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். தற்போது கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததால் இந்த ஆண்டு பக்தர்கள் வருகையால் சபரிமலை களைகட்டுகிறது. ஆரம்பத்தில் 25,000 பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், படிப்படியாக அந்த எண்ணிக்கை உயர்த்தப்பட்டது. அதன்படி, கடந்த 11-ஆம் தேதி பம்பையிலிருந்து நீலிமலை, அப்பாச்சி மேடு, மரக் கூட்டம் வழியுள்ள வனப் பாதை ஐயப்பன் பக்தர்களுக்காக திறந்துவிடப்பட்டுள்ளது.

மேலும் பக்தர்கள் சபரிமலையில் தங்கிச் செல்லவும், பம்பையில் நீராடி தர்ப்பணம் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கேரள அரசு மற்றும் தேவசம்போர்டு இணைந்து சபரிமலை பக்தர்களுக்கு மேலும் பல தளர்வுகளை அறிவித்துள்ளன. இதையடுத்து பக்தர்களுக்காக திறக்கப்பட உள்ள வன பாதையான பெருவழிப் பாதையில் காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். பெருவழிப் பாதையில் பயணம் செய்யும் பக்தர்கள் பயணத்திற்கு தேவையான குடிநீர், உணவு, மருத்துவம், மின்விளக்கு வசதிகள், ஓய்வறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யும் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Categories

Tech |