Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ்…! சம்பளத்துடன் ஒருநாள் விடுமுறை…. மாநில அரசு அறிவிப்பு…!!!!

கோவாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால்  14ஆம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டசபை தேர்தல்  கோவா, உத்தர பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட், இந்த 5 மாநிலங்களில்நடைபெறஇருக்கிறது. இந்நிலையில் இந்நிலையில் இந்த 5மாநிலங்களில் சட்டசபை    தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.அந்தவகையில்  உத்தரபிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும். இதில் முதற்கட்ட முதல் கட்ட தேர்தல் பிப்ரவரி மாதம் 10-ஆம் தேதியன்று தொடங்குகிறது.  கடைசி ஏழாவது கட்ட தேர்தல் மார்ச் மாதம் 7ஆம் தேதி நடைபெற உள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் முதற் கட்ட தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி அன்றும் இரண்டாம் கட்ட தேர்தல் மார்ச் 3ஆம் தேதியன்றும்  நடைபெறுகின்றது. 14ஆம் தேதி உத்ரகாண்ட், பஞ்சாப் ,கோவா ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும். தேர்தல் முடிவுகள் மார்ச் மாதம் 10 தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கோவாவில் வரும் 14ஆம் தேதி சட்டமன்ற தேர்தலையொட்டி விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் பொது மக்கள் வாக்களிக்க ஏதுவாக கோவாவில் வருகிற 14-ஆம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |