Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ்…! சிலிண்டருக்கான புதிய திட்டம்…. இந்தியன் ஆயில் சூப்பர் முடிவு…!!!!

சிலிண்டர் தட்டுப்பாட்டை குறைக்க புதிதாக மூன்று ஆலைகள்  அமைக்க இந்தியா ஆயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்திய ஆயில் நிறுவனம் வடக்கு மாநிலங்களில் புதிதாக மூன்று ஆலைகள் அமைக்க   திட்டமிட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் சிலிண்டருக்கு  தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில் புதிய ஆலைகளை அமைக்க இந்தியன் ஆயில்  முடிவு செய்துள்ளது. இந்த ஆலைகள் மூலம் 2030ஆம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு 8 கோடி சிலிண்டர்களை நிரப்புவதற்கு இந்தியன் ஆயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய மூன்று ஆலைகளும் வடகிழக்கு மாநிலங்களான மிசோரம், மேகாலயா, அருணாச்சலபிரதேசம் ஆகியவற்றில் வரவிருக்கின்றன.

இதற்காக சுமார் 350 கோடி ரூபாய் வரை முதலீடு தேவைப்படும் என இந்திய நிறுவனத்தின் தலைமை அதிகாரி ரமேஷ் கூறியுள்ளார். தற்போது வடகிழக்கு பகுதியில் இந்திய ஆயில் நிறுவனம் 9 ஆலைகளை இயக்கி வருகிறது. இதில் 5.23 கோடி சிலிண்டர்கள் நிரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் நிரப்பும் திறனை அதிகரிப்பதற்காக 325 கோடி முதல் 350 கோடி ரூபாயை முதலீடாகப் புதிய ஆலைகள் அமைக்க திட்டமிட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார்.

Categories

Tech |