Categories
மாநில செய்திகள்

ஹேப்பி நியூஸ்!…. சென்னை டூ ஷீரடி…. பக்தர்களுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்திய அளவில் பொதுமக்களுக்கு IRCTC, ரயில் சேவையுடன் விமான சுற்றுலா சேவையையும் வழங்கி வருகிறது. அந்த வகையில் IRCTC சென்னையில் இருந்து ஷீரடி மற்றும் காசிக்கு விமான சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி சென்னையில் இருந்து ஷீரடிக்கு வரும் மார்ச் 18 ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் சுற்றுலா தொடங்குகிறது. இந்த ஆன்மீக சுற்றுலாவில் சிங்கனாபூர், மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடி, ஜோதிர்லிங்க கோயில், திரிம்பகேஷ்வர் ஆகிய இடங்களை தரிசிக்கலாம்.

இந்த பயணத்திற்கான கட்டணம் ரூ.14 ஆயிரத்து 500 ஆகும். அதேபோல் மார்ச் 28 ஆம் தேதி சென்னை டூ காசி விமான சுற்றுலா தொடங்குகிறது. இந்த 6 நாள் சுற்றுலாவுக்கான பயண கட்டணம் ரூ.29 ஆயிரத்து 500 ஆகும். இதில் அலகாபாத், கயா, காசி உள்ளிட்ட இடங்களை கண்டு ரசிக்கலாம். மேலும் இந்த ஆன்மீக சுற்றுலாவுக்கு 2 டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவித்துள்ளது.

மேலும் இது தொடர்பான கூடுதல் விவரங்களை 82879 31974, 90031 40682, 90031 40714 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். www.irctctourism.com என்ற இணையதள முகவரியிலும் தகவல்களை பெற முடியும் என்று IRCTC தகவல் தெரிவித்துள்ளது.

Categories

Tech |