தமிழகத்தில் மேலும் 788 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கடந்த 24 மணி நேரத்தில் 788 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். 2,692 பேர் குணமடைந்துள்ளனர். 14,033 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இதன் காரணமாக ஒட்டுமொத்த பாதிப்பானது 34,45,717 ஆக அதிகரித்துள்ளது. 33,93,703 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். ஒட்டு மொத்த உயிரிழப்பானது 37,981 ஆக அதிகரித்துள்ளது. மாவட்ட அளவில் சென்னையில் 191 பேருக்கும், கோவையில் 115 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் 100-க்கும் கீழாகவே பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.