தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு பல்வேறு திட்டப் பணிகளை சிறப்பாக செய்து வருகிறது. அது மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் திமுக அரசு பொறுப்பேற்றவுடன் அரசுப் பேருந்துகளில் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இலவச பயணம் என தமிழக அரசு அறிவித்தது.
இதையடுத்து தமிழகத்தில் உள்ள அரசுப் பேருந்துகளில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தை போக்குவரத்துத்துறை அமைச்சர் அண்மையில் அறிவித்தார். இந்நிலையில் குழந்தைகள் இலவச பயண திட்டத்தை உடனடியாக அமல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட வேளாண் இயக்குனர்களுக்கும் போக்குவரத்து துறை முதன்மைச் செயலாளர் கோபால் கடிதம் அனுப்பியுள்ளார்.