திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இவ்வாறு சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் நாழிக்கிணற்றில் புனித நீராடுவதற்கும், வள்ளிக்குகையில் தரிசனம் செய்வதற்கும் அனுமதி கட்டணம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. பக்தர்களுடைய நலன் கருதி இந்த வசதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி மூத்த குடிமக்கள் தரிசன வரிசையில் நீண்ட நேரம் காத்திருப்பதை குறைப்பதற்காக சண்முக விலாசம் மண்டபம் பகுதியில் தனி வரிசை ஏற்படுத்தி கட்டணமின்றி விரைவாக தரிசனம் செய்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வயதானவர்கள் தங்களுடைய அடையாள ஆவணம் ஏதாவது ஒன்றை காண்பித்து விட்டு உதவிக்கு ஒருவர் மட்டும் அனுமதிக்கப்பட்டு விரைவு தரிசனம் செய்வதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகள் அனைத்தும் இன்று முதல் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.