நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நாட்டில் தொற்று பரவலுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் நோய்த் தொற்றுக்கு எதிராக போடப்பட்டு வரும் தடுப்பூசிகளின் விலையை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசி ஒரு தவணை முறையே ரூ.1,200 மற்றும் ரூ.780-ஆக உள்ளது. இந்த நிலையில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசி விலையை ரூ.275-ஆக குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.