Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ் மக்களே….! ஆதார்-பான் இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு…. ஆனா ஒரு கண்டீசன்…!!!!

இந்தியாவில் தனி நபர் அடையாள அட்டைகளுள் ஒன்றாக ஆதார் கார்டு இருக்கிறது. ஏனென்றால் ஆதார் கார்டின் பயன்பாடு பல துறைகளில் தேவைப்படுகிறது. ஆதார்கார்டு வாயிலாக வங்கிகளில் டிஜிட்டல் முறையில் பணத்தை பெற முடிகிறது. இதையடுத்து ஆதார்கார்டுடன் ரேஷன் கார்டு, வங்கிகணக்கு உள்ளிட்டவை இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனை முதன் முதலில் மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை 1ம் தேதி அறிவித்தது. இதற்கான காலக்கேடு பல்வேறு முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதற்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் மத்திய அரசு அறிவித்தது. இதனிடையே இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவத் தொடங்கியதால் இந்த கால அவகாசத்தை வருகிற மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டித்தது. அதுமட்டுமல்லாமல் இணைக்கப்படாதவர்களுக்கு ரூபாய் 10,000 அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில், பான் கார்டு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலகெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், தற்போது மார்ச் 31, 2023 வரை கால அவகாசம் வழங்கி நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. எனினும், அதற்கு பல்வேறு நிபந்தனைகளும் விதித்துள்ளது. அதாவது, இன்று முதல்(ஏப்.1, 2022) அடுத்த மூன்று மாதங்களுக்கு பான் கார்டு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பவர்களுக்கு ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும். மூன்று மாதங்களுக்கு பின்னர், பான் ஆதார் இணைப்பவர்களுக்கு ரூ.1000 அபராதம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
மேலும், மார்ச்.31 2023க்குள் பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால், ஏப்ரல் 1, 2023 முதல் உங்கள் பான் கார்டு செயலிழக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |