Categories
உலக செய்திகள்

ஹேப்பி நியூஸ்…. மக்களே இனி இது தேவையே இல்ல!…. வெளியான செம அறிவிப்பு….!!!!

துருக்கியில் பிசிஆர் பரிசோதனை இனி விமான பயணிகள் உட்பட உள்ளூர் மக்களுக்கும் தேவை இல்லை என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது துருக்கியில் இதுவரை நாடக மேடைகள், திரையரங்குகள், பேருந்துகள், கச்சேரி அரங்குகள், உள்நாட்டு விமான சேவைகள், ரயில்கள் என எங்கு சென்றாலும் கொரோனா பிசிஆர் சோதனை முடிவுகள் கட்டாயம் என்ற விதி நடைமுறையில் இருந்தது.

ஆனால் துருக்கி அரசாங்கம் தற்போது அந்த விதியை நீக்கியுள்ளது. அதாவது தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்களுக்கு மட்டுமே இது போன்ற விதிகள் பொருந்தும் என்று அறிவித்துள்ளது. அதேபோல் தனியார் துறை மற்றும் பொது துறை ஊழியர்கள் பணிக்கு செல்லும் போது இனி கொரோனா இல்லை என்பதற்கான சான்றிதழை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |