Categories
சினிமா

ஹேப்பி நியூஸ் மக்களே….! திரையரங்குகளில் 100% அனுமதி…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

இந்த மாதம் 16 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுடன் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் கடந்த ஆண்டு போலவே, இந்த ஆண்டும் அதிகரித்து வந்தது.  இதனால் நாளுக்குநாள் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்த கொண்டே இருந்தது. இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு நோய் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அந்த வகையில் திரையரங்குகளில் கடந்த ஆண்டு  ஏப்ரல் 10 முதல் 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே  இயங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

ஆனால் தற்போது கொரோனா பரவலின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் அரசு கட்டுப்பாட்டு விதிகளில் தளர்வு ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பிப்ரவரி 16 முதல் 100% இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்படலாம் என தமிழக அரசால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் மக்கள் முகக் கவசத்தை கட்டாயம் பொது இடங்களில் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் இரண்டு தவணை தடுப்பூசியை போட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |