குடும்ப அட்டை, ஆதார் விவரங்களை சரியாக வழங்காதவர்கள் அதனை சரியாக அளித்தால் ஆய்வு செய்து நகை கடன் தள்ளுபடி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி கிடையாது . நகை கடன் தள்ளுபடி பெறும் பயனாளிகளின் பட்டியலை இறுதி செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நகைக்கடன் பெற்ற 48, 84, 726 பெயரில் 35,37, 697 பேருக்கு நகை கடன் தள்ளுபடி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 25% பேர் மட்டுமே நகை கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்கள். 2020இல் கூட்டுறவு வங்கியில் பயிர் கடன் பெற்றிருந்தால் நகை கடன் தள்ளுபடி சலுகையை பெற முடியாது” என்றும் தெரிவித்தது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் கூட்டுறவுத்துறை மூலம் 5 சவரன் கீழ் வழங்கப்பட்ட 35 லட்சம் நகை கடன்களில் 14.5 லட்சம் நகைக் கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்ய ஏற்புடையது. நகை கடன் தள்ளுபடி செய்பவர்களுக்கு ஜனவரி 3 முதல் நகைகள் வழங்கப்படும் என்று அமைச்சர் பெரியசாமி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வைத்தகவர்களில் 10,18,066(10%) பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி உண்டு என்றும், குடும்ப அட்டை, ஆதார் விவரங்களை சரியாக வழங்காதவர்கள் அதனை சரியாக அளித்தால் ஆய்வு செய்து நகை கடன் தள்ளுபடி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.