கொச்சி மற்றும் புதுச்சேரிக்கு திருப்பதி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமான சேவை தொடங்க உள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது. திருப்பதி விமான நிலைய அதிகாரிகள் வரும் குளிர்காலத்தில் 12 கூடுதல் சேவைகளை அனுமதிக்க கோரி விண்ணப்பித்துள்ளனர். கோடையில் இங்கிருந்து 32 சேவைகள் நடத்தப்படுகின்றன. கூடுதலாக 12 சேவைகள் குளிர் காலத்தில் மொத்தம் 44 ஆக இந்த சேவைகளை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. கோடைகாலத்தில் திருப்பதியில் இருந்து இந்த இரண்டு நகரங்களுக்கும் தினசரி சேவைகள் உள்ளன.
குளிர்காலத்தில் சேவை பொதுவாக அக்டோபர் கடைசி ஞாயிறு முதல் தொடங்குகிறது. மேலும் இந்த குளிர்கால சேவை மார்ச் கடைசி ஞாயிற்றுக்கிழமை முடிவடைகிறது. விரைவில் திருப்பதி விமான நிலையத்தில் கூடுதல் சேவைகள் அளிப்பது குறித்து அதிகாரிகளிடமிருந்து நல்ல பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக திருப்பதி விமான நிலைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.