புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. எனவே ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடைபெற்றது. இதனையடுத்து கொரோனா குறைந்ததால் பள்ளி திறக்கப்பட்டு மீண்டும் வகுப்புகள் தொடங்கி தேர்வுகளும் முடிவடைந்தது.
இதனையடுத்து கோடை விடுமுறைக்கு பிறகு நாளை முதல் புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகிறது. இந்நிலையில் நாளை மற்றும் நாளைய மறுதினம் புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் அரை நாள் மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என கல்வித்துறை இயக்குநர் ருத்ர கவுடு அறிவிப்பு.