தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. இதில் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலளித்து பேசினார். இதில் உரையாற்றிய அவர், டெல்டா மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும். 19 மாவட்டங்களில் 68 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இவை மேலும் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவித்தார். கூட்டுறவுத் துறையின் மூலமாக தமிழக அரசு நடத்தி வரும் இந்த தொழில்பயிற்சி கல்லூரியில் பயிலும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என்று கூறினார். நியாயவிலை கடைகளில் 3310 விற்பனையாளர்கள் 666 கட்டுநர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பட்டியல் பெற்று பணி நியமனம் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.