Categories
மாநில செய்திகள்

ஹேப்பி நியூஸ்….. ரேஷன் கார்டுக்கு 5000 ரூபாய்?….. விரைவில் வெளியாகும் அறிவிப்பு…..!!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் அண்மைக்காலமாக பாஜக – திமுக கட்சியினர் இடையே போட்டி போட்டுக்கொண்டு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜகவுக்கு அதிக செல்வாக்கு இருக்கிறது. இந்நிலையில் திமுகவுக்கு எதிராக அரசியல் நடத்துவதில் அதிமுகவை விட பாஜக முன்னணி வகிக்கிறது. அந்த வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரிசுப் பொருட்களுடன் ரொக்கத் தொகை வழங்காததை பொது மக்களிடையே ஒரு விவாதமாக பாஜக சார்பில் மாவட்டம் முழுவதும் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.

அந்த சுவரொட்டியில் தமிழக மக்களுக்கு போலி வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த விடியல் அரசே பொங்கல் பரிசு தொகை 5,000 ரூபாய் எங்கே? என்கிற வாசகம் எழுதப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த போஸ்டருக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் திமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளில், ஒன்றிய பாஜக அரசே தேர்தலின்போது ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவேன் என்று கூறியது என்னாச்சு? என்ற கேள்வி சுவரொட்டிகளில் பதிலடி கொடுக்கும் வகையில் இருந்தது. இதையடுத்து திமுகவின் பதிலடிக்கு அடுத்த பதிலடியாக பாஜக மீண்டும் மற்றொரு சுவரொட்டியை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த சுவரொட்டியில் 5 சவரன் கூட்டுறவு சங்க நகைக்கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி, மாணவர்கள் கல்வி கடன் தள்ளுபடி, குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் 1000 ரூபாய் ஆகியவை எங்கே? தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 2 கட்சிகளுக்கும் இடையிலான சுவரொட்டி விவாதத்தால் கன்னியாகுமரி மாவட்ட அரசியல் களம் பரபரப்பாக காட்சி அளிக்கிறது. இந்த தகவல் திமுக மேலிடம் வரை சென்றதால், திமுக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்நிலையில் 5,000 ரூபாய் பொங்கல் பரிசு பணம் உள்பட பல்வேறு விவகாரங்களை தூண்டும் வகையில் பாஜக ஒட்டியுள்ள போஸ்டர்கள் உள்ளதால் ரேஷன் கார்டுகளுக்கு 5,000 ரூபாய் பணத்தை கொடுத்து மக்கள் மனதை சாந்தப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதனால் இவற்றிற்கான அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |