மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள மேரா ரேஷன் செயலியின் அனைத்து முக்கிய அம்சங்கள் மூலம் நாடு முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களும் பயனடைவார்கள்.
இந்தியாவில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ் மேரா ரேஷன் செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு இடத்தில் இருந்து புதிய இடத்திற்கு இடம்பெயரும் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தைத் தக்கவைக்க உதவும் வகையிலும்ரேஷன் கார்டு தாரர்கள் தங்கள் வசதிக்கேற்ப ஒரே ரேஷன் கார்டை பயன்படுத்தி ரேஷன் சேவைகளை எளிமையாக பெறும் வகையிலும் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவையை பெறுவதற்க்கு ஆண்ட்ராய்டு போன்களில் கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள உள்ளது. ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் PDS எனப்படும் பொது விநியோக முறை மூலம் உணவு தானியங்களை பெறுவது வழக்கம்.
ஆனால் அவர்கள் வெவ்வேறு மாநிலங்களுக்குச் செல்லும்போது PDS நன்மைகளைப் பெறுவதில் சில சிக்கல்கள் உள்ளது. இப்போது மேரா ரேஷன் செயலி மூலம் இந்த பிரச்சினை தீர்க்கப்படும். பயனாளிகள் நாடு முழுவதும் ரேஷன் கார்டு சேவைகளைப் பெற முடியும். மேலும் மக்கள் தங்கள் விரல் நுனியில் அனைத்து நன்மைகளையும் பெறுவார்கள். முன்னதாக ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டுமே இந்த செயலி இருந்தது. தற்போது 10 மொழிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த மேரா செயலி பல சிறப்பம்சங்களை கொண்டது. அதில் “ரேஷன் கார்டு எண்ணை சமர்ப்பித்து பயனர் தங்களை பதிவு செய்து கொள்ளலாம். ரேஷன் கார்டு எண் அல்லது ஆதார் எண் விருப்பத்தை தேர்ந்தெடுத்து நமக்கு அரசு வழங்கியுள்ள அளவுகளை அறிந்து கொள்ளலாம். பயனர்கள் தங்கள் இருப்பிடத்தை இணையத்தின் மூலம் தெரிவித்து அருகில் அமைந்துள்ள ரேஷன் கடைகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம். ஒரு நாடு ஒரே ரேஷன் கார்டு வசதி உள்ள மாநிலங்களையும் பயனர் சரிபார்க்கலாம்.
ரேஷன் கார்டு எண்ணை உள்ளிடுவதன் மூலம் பயனாளிகள் தங்கள் பரிவர்த்தனை விவரங்களை அறிந்து கொள்ளலாம். ஆதார் எண் அல்லது ரேஷன் கார்டு எண்ணைப் பயன்படுத்தி கார்டுதாரரின் தகுதியை சரிபார்க்கலாம். பயனாளி தனது மொபைல் எண் மற்றும் கார்டு எண்ணைப் பகிர்வதன் மூலம் ரேஷன் சேவைகளை பற்றிய தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம்”.