சமூக நல பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் மாதந்தோறும் 59.45 லட்சம் பயனாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நடப்பாண்டு முதல் விதவை பெண்கள், பாலின சிறுபான்மையினர் மற்றும் திருமணமாகாத பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் ரூ.600-லிருந்து ரூ.800-ஆக உயர்த்தி வழங்கப்படும். இதன் மூலம் சுமார் 1.32 லட்சம் பேர் பயனடைவார்கள்.
வீட்டு வாசலுக்கு திட்டத்தின் கீழ் ஜாதி, வருமான சான்றிதழ்கள், வருவாய் ஆவணங்கள் விவசாயிகளுடைய வீடுகளுக்கு சென்று இலவசமாக வழங்கப்படும். அதேபோல் ஆசிட் தாக்குதலால் பாதிக்கப்படும் பெண்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் ரூ.3,000-லிருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். விவசாய நிலம் உட்பட அனைத்து நிலங்களையும் சர்வே நடத்த ரூ.287 கோடி ஒதுக்கப்படும். டிஜிட்டல் முறையில் 3 ஆண்டுகளில் வரைபடம் வழங்கப்படும்.