Categories
தேசிய செய்திகள் பல்சுவை

ஹேப்பி நியூஸ்…. விவசாயிகளுக்கு 3000 ரூபாய் பென்ஷன்…. மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் திட்டம்….!!!!

பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக ஒவ்வொரு வருடமும் 6,000 ரூபாய் செலுத்தப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு 3 தவணைகளாக ஒரு தவணைக்கு 2,000 ரூபாய் என்ற கணக்கில் மொத்தம் 6,000 ரூபாய் செலுத்தப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் விவசாயிகளால் ஒவ்வொரு ஆண்டும் 36,000ரூபாய் பெற முடியும். அந்த திட்டம்தான் பிரதான் மந்திரி கிசான் மாந்தன் யோஜனா திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ் 60 வயதைத் தாண்டிய விவசாயிகளுக்கு மாதம்தோறும் 3000 ரூபாய் வழங்கப்படும். மாதம் ரூபாய் வீதம் ஆண்டுக்கு 36,000 ரூபாய் கிடைக்கும்.

இந்த பென்ஷன் திட்டத்தின் கீழ் பயனடைய 18 வயது முதல் 40 வயதுக்குட்பட்ட விவசாயிகள் திட்டத்தில் பங்கேற்ற முதலீடு செய்யலாம். வயதிற்கேற்ப முதலீடு தொகை மாறுபடும். 2 ஹெக்டேருக்கள் நிலம் வைத்திருக்கவேண்டும். 18 வயதில் இந்த திட்டத்தில் இணையும் விவசாயிகள் மாதம்தோறும் 55 ரூபாய் முதலீடு செய்தால் போதும். 30 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மாதம் 1,000 ரூபாய் முதலீடு செய்தால் இந்த திட்டத்தில் பயன் பெறலாம். மேலும் இந்தத் திட்டத்தில் இணைவதற்கு maandhan. In என்ற முகவரியில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கு ஆதார் கார்டு, வங்கிக் கணக்குப் புத்தகம், பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ ஆகியவை தேவைப்படும். ஏற்கனவே பிஎம் கிசான் சம்மான் நிதித் திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் இந்த பிஎம் கிசான் மாந்தன் யோஜனா திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம்.

Categories

Tech |