3552 பணியிடங்களுக்கு நேரடித் தேர்வுக்கான அறிவிப்பை சீருடை பணியாளர் தேர்வு வாரியம் இன்று வெளியிடுகிறது. இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், தீயணைப்பு வீரர் பணியிடங்களுக்கான அறிவிப்பு இன்று வெளியாகிறது. இதற்கு விருப்பமுள்ள இளைஞர்கள் ஜூலை 7ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnusrb.tn.giv.in என்ற இணையதளத்திலிருந்து மட்டுமே விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories