Categories
மாநில செய்திகள்

ஹேப்பி நியூஸ்….. CBSE-ன் பிளஸ் 2 மாணவர்களுக்கு…. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

12-ம் வகுப்பு மாணவர்கள் கூடுதல் மதிப்பெண்களுக்காக எழுதும் தேர்வின் அடிப்படையில் தான் அவர்களின் தேர்ச்சி அறிவிக்கப்படும் என்ற விதிமுறையை நீக்கும்படி மத்திய இடைநிலை கல்வி வாரியத்திற்கு உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ. எம். கான்வில்கர், சி. டி. ரவிக்குமார் ஆகியோர், இரண்டு தேர்வுகளில் எந்த தேர்வில் அதிக மதிப்பெண்கள் மாணவர்கள் பெற்றுள்ளார்களோ அதை தேர்வு செய்யும் வாய்ப்பை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தனர்.

மேலும் இரண்டாவது தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தான் தேர்ச்சி என்ற விதிமுறையை சிபிஎஸ்இ நீக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் ஆணையிட்டனர்.

Categories

Tech |