Categories
மாநில செய்திகள்

“ஹேப்பி பர்த்டே மோடி ஜி”‌ பிரதமரின் பிறந்த நாளை முன்னிட்டு இலவச ஆட்டோ சவாரி…. கலக்கும் நெல்லை ஓட்டுனர்…..!!!!

பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று 72-வது பிறந்தநாள். பிரதமரின் பிறந்தநாளை நாடு முழுவதும் அவருடைய ஆதரவாளர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதன் பிறகு தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட இளைஞரணி சார்பில் 138 ரத்த தானம் மற்றும் 5 பேர் உடல் தானம் செய்தனர். இதேபோன்று ஒடிசாவில் உள்ள பூரி கடற்கரையில் பிரதமர் மோடியின் உருவபடத்தை 1213 தேநீர் கோப்பைகளை கொண்டு வித்தியாசமான முறையில் மணல் சிற்பமாக செதுக்கி இருக்கிறார். இந்த மணல் சிற்பத்தை சுதர்ஷன் பட்நாயக் என்பவர் செதுக்கியிருந்தார்.

அந்த மணல் சிற்பத்தில் ஹேப்பி பர்த்டே மோடி ஜி என்ற வாழ்த்தும் இருந்தது. இப்படி பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு பகுதிகளும் அவர்களின் ஆதரவாளர்கள் ஒரு விஷயத்தை செய்து வருகிறார்கள். அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான மணிகண்டன் என்பவர் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று முழுவதும் இலவச சவாரி அழைத்து செல்வதாக கூறியுள்ளார். இவர் நெல்லை மாநகராட்சியின் முதலாவது வார்டு பாஜக தலைவர் ஆவார். பிரதமர் நரேந்திர மோடியின் மீது கொண்ட  அன்பினால், அவருடைய பிறந்தநாளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசையில் இலவச சவாரி அழைத்துச் செல்வதாக அறிவித்துள்ளார்.

Categories

Tech |