Categories
தேசிய செய்திகள்

ஹே! நானும் ரவுடி தான்…. நானும் ரவுடி தான்…. போலீசிடம் பெண்ணின் அடாவடி…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோன நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

இதனால் பல மாநிலங்களிலும் கடும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக மக்களின் நலன் கருதி முகக்கவசம் அணியாதவர்களிடம் அரசு ரூபாய் 200 அபராதம் விதித்து வருகிறது. அந்த வகையில் ஒரு பெண் வாகன ஓட்டியிடம் அபராதம் வசூலித்ததற்காக அந்த பெண் நானும் ரவுடிதான் யாரை வேண்டுமானாலும் வரச்சொல்லு என்று பேசிய சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Categories

Tech |