வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தா. குளியநூர் கிராமத்தில் நிர்மலா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்பு என்ற மகன் உள்ளார். இந்நிலையில் நிர்மலாவுக்கு அறிமுகமான ஆறுமுகம் என்பவர் ஹைகோர்ட்டில் உங்களது மகனுக்கு இளநிலை உதவியாளர் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பி அன்பு 3 தவணைகளாக 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை ஆறுமுகத்திடம் கொடுத்துள்ளார்.
ஆனால் கூறியபடி ஆறுமுகம் வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதுகுறித்து கேட்டபோது ஆறுமுகமும், அவரது மனைவி கவிதாவும் இணைந்து அன்புக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து அன்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஆறுமுகம் மற்றும் கவிதா ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.