கடந்த சனிக்கிழமை ஹைட்டியில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் பலரும் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 2,189 ஆக அதிகரித்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவான இந்த நில நடுக்கத்தின் அதிர்வுகளால் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் இடிந்து விழுந்து ஆயிரக் கணக்கானவர்கள் தங்களுடைய வாழ்விடத்தை இழந்து தவித்து வருகின்றனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Categories