ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து எடுத்துக் கொண்ட பிறகு தனது
உடலில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக பிரேசில் அதிபர் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலுக்கு ஊரடங்கு எதும் தேவையில்லை எனக் கூறி கடும் விமர்சனங்களை கொடுத்து வந்தவர் பிரேசில் அதிபர் போல்சனாரோ. இவருக்கு சென்ற வாரம் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தன்னை வீட்டில் தனிமைப்படுத்தி இருந்த அவர் மருத்துவ சிகிச்சை எடுத்து வருகிறார். நேற்று இரண்டம் முறையாக அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதிலும் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.
இந்த நிலையில் இணையம் வாயிலாக அவர் உரையாடியபோது ஹைட்ராக்சிகுளோரோகுயின் எடுத்துக்கொண்ட பிறகு எனது உடல்நிலை முன்னேற்றம் கண்டுள்ளது. ஆனால் இது தற்செயலாக நடந்துள்ளதா? இல்லையென்றால் மாத்திரையால் பலன் கிடைத்ததா? என்று தெரியவில்லை அதற்காக இந்த மாத்திரையை உட்கொள்ளுமாறு நான் யாரையும் அறிவுறுத்த போவதில்லை” என்று கூறியுள்ளார்.