Categories
உலக செய்திகள்

ஹைட்ராக்ஸி குளோரோகுயின்… “பதிவை நீக்கிய ட்விட்டர்”… மீண்டும் வம்புக்கு இழுத்த டிரம்ப்..!!

அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிவிட்டதை  டுவிட்டர் நீங்கிய பின்னும் அவர் தொடர்ந்து 14 டுவிட்டுகளை  பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா நோய்க்கு இதுவரை அங்கீகாரம் பெற்ற சிகிச்சைகள் மற்றும் தடுப்பு தடுப்பூசிகள் எதுவும் கிடையாது. மலேரியா காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படும் மருந்து ஹைட்ராக்ஸி குளோரோகுயின், நோயால் பாதிப்படைந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு பரிசோதனைக்காக பயன்படுத்தப்படும் மருந்துகளின் ஒன்றாக இருக்கின்றது. இந்த மருந்தானது இரண்டாம் உலகப்போரின் போது கண்டறியப்பட்டது. மேலும் இத்தகைய மருந்தானது ருமடாய்டு ஆர்த்ரைட்டீஸ் என்ற நோய்க்கு கொடுக்கப்பட்டு வருகிறது. இத்தகைய ஆண்டி மலேரியா மருந்தினை உட்கொள்ளும் போது தசை மற்றும் மூட்டுகளில் வலி, தோலில் அரிப்புகள், இதயம் மற்றும் நுரையீரல் அலர்ஜி, காய்ச்சல், சோர்வு போன்ற பல்வேறு அறிகுறிகளை உடலில் காட்டும் என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் கூறியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்திற்க்கு அதிக ஆதரவு அளித்து கொண்டிருக்கிறார். அந்த மருந்தினை தான் உட் கொண்டதாகவும் அதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியிருக்கின்றார். இதன் தொடர்பாக டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றினை பதிவிட்டார். அத்தகைய வீடியோவில், ஒரு மருத்துவ குழுவினர் கொரோனா வைரஸ் தொற்று நோய் சிகிச்சைக்காக மலேரியா மருந்தினை பயன்படுத்தியுள்ளதாக ட்விட் செய்துள்ளார். இத்தகைய தவறான பதிவை வெளியிட்ட அவரது வீடியோவானது ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் தளங்களில் சென்ற திங்கட்கிழமை மாலை நீக்கப்பட்டது. இதுபற்றி பேஸ்புக் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, “அவர் பதிவிட்ட வீடியோ காட்சிகள் கொரோனாவுக்கான சிகிச்சைகள் பற்றிய தவறான தகவல்களை குறிப்பிட்டுள்ளது” என கூறியுள்ளார்.

அத்தகைய வீடியோவானது நீக்கப்படுவதற்கு முன்னர் 1.4 கோடிக்கு மேலான மக்கள் ஃபேஸ்புக்கில் பார்த்துள்ளதாக தி வாஷிங்டன் போஸ்ட் கூறியுள்ளது. இதனைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சென்ற செவ்வாய்க்கிழமை அன்று ‘கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்காக மலேரியா மருந்தினை பயன்படுத்துவது மிகவும் பாதுகாப்பானது’ என்று தொடர் டுவிட்டுகளை பதிவிட்டுள்ளார். அதே சமயத்தில் சமூக ஊடக நிறுவனங்கள் ஆக உள்ள பேஸ்புக் மற்றும் ட்விட்டர், மலேரியா மருந்தின் பயன்பாட்டை தீங்கு விளைவிக்கும் தவறான தகவல் ஆகக்கூடிய அவரது வீடியோக்கள் அனைத்தையும் சில மணித்துளிகளிலேயே நீக்கியது.

பின்னர் ட்ரம்ப் 14 டுவிட்டுகளை தொடர்ந்து பதிவிட்டுள்ளார். வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் அத்தகைய வீடியோவினை விளம்பரப்படுத்துவதற்காக தனது முடிவை ஆதரித்த டிரம்ப், மலேரியா மருந்தை நம்பி இருக்கின்ற மருத்துவர்கள் அனைவரும் மிகவும் மரியாதைக்கு உரியவர்கள் என தான் கருதுவதாக கூறியுள்ளார். இத்தகைய சம்பவமானது வெள்ளை மாளிகைக்கு சமூக ஊடக நிறுவனங்களுக்கும் இடையே மோதலை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

Categories

Tech |