சென்னையில் நடைபெற்றுவரும் ஆறாவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ஆடி வருகின்றன. வழக்கம்போல டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வந்தது. இறுதியில் மேக்ஸ்வெலின் அதிரடியால் பெங்களூர் அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட்களை இழந்து 149 ரன்களை எடுத்தது. 41 பந்துகளில் ஐந்து பவுண்டரி, மூன்று சிக்சர் என 59 ரன்களுக்கு கடைசி பந்தில் மேக்ஸ்வெல் ஆட்டமிழந்தார்.
ஐபிஎல்லில் ஐந்து ஆண்டுகளுக்குப் பின் அவர் அடிக்கும் அரைசதம் இதுவாகும். ஹைதராபாத் அணி தரப்பில் ஜேசன் ஹோல்டர் மூன்று, ரஷீத் கான் இரண்டு, நடராஜன், புவனேஸ்வர் குமார், ஷபாஸ் நதீம் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர். தற்போது 150 ரன்கள் இலக்குடன் ஹைதராபாத் அணி ஆடி வருகிறது.