விஷால் 31 படக்குழுவினர் படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்றுள்ளனர்.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஷால் நடிப்பில் எனிமி, துப்பறிவாளன் 2 ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகிறது. மேலும் விஷாலின் 31-வது படத்தை புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் டிம்பிள் ஹயாதி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் விஷாலின் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் ‘விஷால் 31’ படக்குழுவினர் ஹைதராபாத் சென்றுள்ளனர். இது குறித்து நடிகர் விஷால் தனது சமூக வலைதளப் பக்கத்தில், ஜூலை இறுதிக்குள் இந்த படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும், மீண்டும் பணிக்கு வந்ததில் மகிழ்ச்சி என்றும் தெரிவித்துள்ளார்.