Categories
தேசிய செய்திகள்

ஹைதராபாத் தேர்தல் தொடக்கம்… விறுவிறு வாக்குப்பதிவு…!!!

150 வார்டுகளை கொண்ட மிகப்பெரிய மாநகராட்சியான ஹைதராபாத்தில் மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது.

தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத் மாநகராட்சியில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. அதற்காக சட்டசபை தேர்தலுக்கு இணையாக அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நடந்தது. நாட்டின் ஐந்தாவது மிகப்பெரிய மாநகராட்சயான ஹைதராபாத்தில் மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.

மொத்தம் 150 வார்டுகளை கொண்ட ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் மொத்தம் 74,44,260 வாக்காளர்கள் உள்ளனர். டிஆர்எஸ் 150, பாஜக 149, காங்கிரஸ் 146, தெலுங்கு தேசம் 106, ஓவைசி 51 இடங்களில் போட்டியிடுகிறது. ஹைதராபாத் மாநகராட்சியை கைப்பற்ற சந்திரசேகர் ராவின் ஆளும் கட்சி மற்றும் பாஜக இடையே கடும் போட்டி தொடங்கியுள்ளது.

Categories

Tech |