Categories
மற்றவை விளையாட்டு

ஹைதராபாத் மாரத்தான் போட்டி 2022… லோகோ ம்ற்றும் டி-ஷர்ட் அறிமுகம்….!!!!

தெலுங்கானா மாநில ஐதராபாத்தில் ஆகஸ்ட் 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் மாரத்தான் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஏற்பாட்டில் 15,000 பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 27ஆம் தேதி அன்று நடைபெறும் முன்னோட்ட மாரத்தான் நிகழ்ச்சியில் 5 கிலோமீட்டர் ஓட்டம் நடைபெறும். 28ஆம் தேதி 10 கிலோமீட்டர் அரை மாரத்தான் மற்றும் முழுமாரத்தான் ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளது.

இதனையடுத்து தேசிய சுரங்க நிறுவனமான என்.எம்.டி.சி. இந்த மாரத்தான் போட்டிகளுக்கு ஸ்பான்சர் செய்கிறது. இந்நிலையில் நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாரத்தான் போட்டிகளுக்கான லோகோ மற்றும் டீ-ஷர்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் புகழ்பெற்ற பாக்ஸிங் விளையாட்டு வீராங்கனை நிகத் ஜரீன் காணொளி மூலம் இதில் கலந்து கொண்டார்.

Categories

Tech |