Categories
உலக செய்திகள்

ஹைதியில் 2 போட்டிக் குழுக்கள் மோதல்…. சிக்கி தவிக்கும் மக்கள்…. பரபரப்பு….!!!!

வட அமெரிக்காவின் கரீபியன் தீவுநாடான ஹைதி பிரதமர் பதவி விலக கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர். வட அமெரிக்காவின் தீவுநாடான ஹைதி நாட்டில் தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸ் கலவர பூமியாக மாறி இருக்கிறது. அந்நாட்டின் அதிபரான ஜோவினெலை படுகொலை செய்யப்பட்டது முதல் பல இடங்களில் போராட்டங்கள் நீடித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக விலைவாசிஉயர்வு, வேலை இல்லா திண்டாட்டம் என பல்வேறு பிரச்சனைகள் எழுந்தது. 2 மாதத்தில் நடந்த வன்முறை சம்பவங்களில் 100-க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

2 போட்டிக் குழுக்கள் மோதலில் ஈடுபட்டு இருப்பதால் ஹைதியில் பதற்றம் காணப்படுகிறது. இதற்கிடையில் நிலைமை மோசமானதால் ஹைதியில் துப்பாக்கி விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக பேசிய போராட்டக்காரரான கிளவுட் பவுலியர் “உணவு, குடிநீர் இல்லாத நாட்டில் வாழ்ந்து வருகிறோம். சமூகத்தில் பல்வேறு பிரச்சனைகள் இருக்கிறது. நிலைமை மோசமாக இருக்கிறது. மக்கள் தெருவில் இரங்கி போராடவேண்டி இருக்கிறது. இளைஞர்கள் உயர்பொறுப்புக்கு வந்தால் நாட்டில் நிம்மதி பிறக்கும்” என்று நம்புகிறோம் என கூறினார்.

Categories

Tech |