ஹைதி நாட்டில் நேற்று முன்தினம் இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவானது. மேலும் இது போர்ட் ஆஃப் பிரின்சில் இருந்து 118 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்களின் என்ணிக்கை தற்போது வரை 1.297 ஆக அதிகரித்துள்ளது. பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மேலும் பல உயரமான கட்டடங்கள் இடிந்து தரை மட்டமானது. அதன் இடிபாடுகளில் சிக்கி மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் எழுந்துள்ளதால் இறப்பு எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிலநடுக்கத்தால் கட்டிய இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.