Categories
உலக செய்திகள்

ஹைய்யா ஜாலி! ஜிம்மில் சிறுவர்கள் போல…. விளையாடிய தலிபான்கள்… கலாய்த்த நெட்டிசன்கள்…!!!

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் அங்கு ஒரு சில நாட்களில் தலிபான்கள் ஆட்சி அமைக்க உள்ளனர். இதனால் அவர்களின் கொடுமையான ஆட்சிக்கு பயந்த அந்த நாட்டு மக்கள் வேறு நாடுகளுக்கு தப்பித்து சென்று விடலாம் என்று விமானங்களில் ஏறுவதற்கு கூட்டம் கூட்டமாக கூடி வருகின்றனர்.  இது குறித்து வெளியாகி வீடியோவெளியாகி  உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

பல நாடுகளும் ஆப்கான் மக்கள் குறித்து கவலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆப்கானில் தலிபான்கள் சிலர் அம்யூஸ்மெண்ட் பார்க்கில் உள்ள ரைடுகளை சிறுவர்கள் போல பயன்படுத்திய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனைத்தொடர்ந்து அதிபர் மாளிகையில் உள்ள உடற்பயிற்சி மையத்தில் அவர்கள் புகுந்து உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அம்யூஸ்மெண்ட் பார்க்கில் அவர்கள் எப்படி சின்ன குழந்தைகள் போல விளையாடினார்களோ  அதேபோல ஜிம்மில் உள்ள பொருட்களை பயன்படுத்த தெரியாமல் அவர்கள் பயன்படுத்துவது தெரிகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் சிலர் இந்த வீடியோவை பகிர்ந்து தலிபான்களை கிண்டல் செய்து வருகின்றனர்.

Categories

Tech |