பாகிஸ்தானை சேர்ந்த முகமது ஆதில் என்பவர் தன்னுடைய குடும்பத்தோடு பிறந்தநாள் கொண்டாடுவதற்காக பாகிஸ்தானில் உள்ள கிரேட்டர் இக்பால் பூங்கா பக்கத்தில் உள்ள போயட் ரெஸ்டாரன்ட் என்ற ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அப்போது அவர்களுக்கு ஹோட்டல் ஊழியர்கள் தண்ணீர் பாட்டில்கள் வழங்கியுள்ளனர். அந்த பாட்டிலை திறந்து அவருடைய குடும்ப உறுப்பினர் ஒருவர் தன்னுடைய கைகளை கழுவியுள்ளார். அப்போது அவர் வழி தாங்காமல் கதற ஆரம்பித்துள்ளார்.
மேலும் அவருடைய கைகளில் தீக்காயம் ஏற்பட்டது போல காயம் ஏற்பட்டுள்ளது. அப்போதுதான் அந்த பாட்டில்களில் ஆசிட் தண்ணீர் அடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் அந்த பாட்டிலில் இருந்த ஆசிட்டை தண்ணீர் என்று நினைத்து குடித்த அவர்களுடைய 2 vவயது குழந்தை வாந்தி எடுக்க ஆரம்பித்துள்ளது. உடனே இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு குழந்தையின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.