Categories
தேசிய செய்திகள்

ஹோட்டலுக்குள் சென்று…. ஊழியர்களை மிரட்டிய…. போலி நிருபர்கள் கைது…!!

ஹோட்டலில் புகுந்த மர்ம நபர்கள் ஊழியர்களை நிருபர்கள் என்று கூறி மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவில் பங்காருபேட்டை மாவட்டதிலுள்ள நீலகிரிபில்லி பகுதியில் வசிப்பவர் பவானி (வயது 29). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். எனவே இவர் ஓசூரிலுள்ள பத்தலப்பள்ளி சாரல் நகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி அங்கிருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மூன்று மர்ம நபர்கள் ஹோட்டலுக்குள் வந்துள்ளனர். இதையடுத்து அங்குள்ள ஹோட்டல் ஊழியர்கள் மற்றும் மேலாளர் பவானி ஆகியோரிடம் சென்று தாங்கள் நிருபர்கள் என்று கூறி தகராறு செய்து மிரட்டியுள்ளனர்.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து பவானி, அட்கோ காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் விசாரணையில், நிருபர்கள் என மிரட்டியவர்கள் ஓசூர் பகுதியை சேர்ந்த முகமது அலி (வயது 33), சானு (29), தயானந்தன் (22) என தெரிய வந்துள்ளது. மேலும் முகமது அலி, சானு ஆகியோர் போலியான நிருபர்கள் மற்றும் தயானந்தன் போலியான  போட்டோகிராபர் என்பதும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் அவர்கள் மூவரையும் காவல்துறையினர் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |