Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஹோட்டலுக்குள் புகுந்த மர்மநபர்கள்…. காவலாளிக்கு நடந்த கொடூரம்…. தி. மலையில் பரபரப்பு…!!

காவலாளி கொடூரமாக  கொலை செய்யப்பட்டுள்ள  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள போளூர் பகுதியில் தாமோதரன் என்பவர் வசித்து வந்துள்ளார். தற்போது  ஓசூரில் இருக்கும் தன்னுடைய மகள் வீட்டில் வசித்து வந்துள்ளார். இவர் அந்த பகுதியில் இருக்கும் ஒரு ஹோட்டலில் காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தாமோதரன்  வேலை முடிந்ததும் ஹோட்டலில் படுத்து தூங்கியுள்ளார். இவர் தூங்கிக்கொண்டிருக்கும் போது திடீரென நள்ளிரவில் ஒரு பயங்கர சத்தம் கேட்டுள்ளது. இதனால் தூக்கத்திலிருந்து எழுந்த தாமோதரன் சத்தம் வந்த இடத்திற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது சில மர்ம நபர்கள் ஹோட்டலின் பூட்டை உடைத்து பணத்தை திருட முயற்சி செய்துள்ளனர். இதனைபார்த்து அதிர்ச்சியடைந்த தாமோதரன் திருடன்,  திருடன் என்று கூச்சலிட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் தாமோதரனின்  கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர்.

அதன்பிறகு ஹோட்டலில் இருந்த 17,000 ரூபாய் பணத்தை திருடி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். மறுநாள் காலை வழக்கம்போல் ஹோட்டல் திறக்கப்பட்டுள்ளது. அப்போது தாமோதரன் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து ஹோட்டல் ஊழியர்கள் ஓசூர் டவுன் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த  தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் அங்கு பதிவான தடயங்களை சேகரித்துள்ளனர். அதன்பின் காத்தவராயனின்  உடலை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காவலாளியை கொலை செய்து பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |