பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள நாகமலை புதுக்கோட்டை பகுதியில் பசும்பொன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேணுகா தேவி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தம்பதியினர் அப்பகுதியில் இருக்கும் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
அப்போது அவர்களை பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் ரேணுகாவின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலிச் சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து பசும்பொன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.