Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஹோட்டலை சூறையாடிய 3 பேர்…. மேலாளர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அவதானப்பட்டி பகுதியில் இருக்கும் ஹோட்டல் முன்பு சிலர் கடந்த 21-ஆம் தேதி காரை நிறுத்தியுள்ளார். இதற்கு வெங்கடாசலம் என்பவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் ஒருவர் வெங்கடாசலம் மீது காரை ஏற்றி சென்றுள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ராஜா, நவீன் குமார், விக்ரம் உட்பட சிலர் நேற்று முன்தினம் ஹோட்டலுக்கு சென்று ஊழியர்களுடன் தகராறு செய்து ஹோட்டல் சூறையாடிவிட்டு சென்றனர். இது குறித்து ஹோட்டல் வேளாளர் முத்துராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விக்ரம், நவீன் குமார், ராஜன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |