இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்தின் படி உணவு பொருட்கள் விற்பனை ரசீது உணவு பாதுகாப்பு துறை பதிவு எண் அச்சிடுவது வரும் ஒன்றாம் தேதி முதல் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது.
உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006 பிரிவு 31 படி அனைத்து உணவு தொழில் செய்யும் வணிகர்களும் உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் பெறவேண்டும். உணவு வணிகம் என்பது மிகப்பெரிய அளவில் உள்ளதால் நுகர்வோர்கள் உணவு தொழில் செய்யும் வணிகர்களின் உரிமம் அல்லது பதிவு எண்ணை அறிந்து கொள்வது அவ்வளவு எளிதானது கிடையாது. நுகர்வோருக்கு உணவு வணிகரின் உரிமம் மற்றும் பதிவு விவரம் அறிய முடியாத காரணத்தினால் உணவுப் பொருட்களில் உள்ள குறைபாடுகள் குறித்து புகார் அளிப்பதில் சிரமம் ஏற்படுகின்றது.
தற்போது உள்ள ஆணைப்படி அனைத்து வகை உணவுப் பண்டங்களின் மீது அச்சடிக்கப்படும் லேபிள்களில் உணவு பாதுகாப்பு துறையின் 14 இலக்க உரிமம் அல்லது பதிவு எண் கட்டாயம் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருள்கள் வாகனங்களில் எடுத்துச் செல்லும்போது வழங்கப்படும் டிரான்ஸ்போர்ட் செல்லான், இன்வாய்ஸ் மற்றும் பில் ஆகிய இரண்டிலும் உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் மற்றும் பதிவு எண் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும். இந்திய பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் food safety connect app பதிவிறக்கம் செய்து அதில் 14 இலக்க உரிமம் அல்லது பதிவு எண்ணை உள்ளிட்டு உரிய விவரங்கள் பெறலாம். அனைத்து உணவு வணிகர்களும் தாங்கள் வழங்கும் அனைத்து ரசீதுகளிலும் 14 உரிமை எண் பதிவு வருகிற ஜனவரி 1 ஆம் தேதி முதல் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்று இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.