திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூர் கோட்டையடி சிக்னல் அருகே ஜான் சிங் சீயோன் என்பவருக்கு சொந்தமான ஹோட்டல் அமைந்துள்ளது. இந்நிலையில் ஜானுக்கும் பட்டிரைக்கட்டிவிளை பகுதியில் வசிக்கும் கணேசன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று ஜானின் ஹோட்டலுக்கு சென்ற கணேசன், சுந்தர், பிரபாகரன், கலைச்செல்வன் ஆகியோர் பொருட்களை உடைத்து சேதப்படுத்தி, ஜானை மிரட்டி விட்டு அங்கிருந்து சென்றனர். இத குறித்து ஜான் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கணேசன் உட்பட 4 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Categories