கேரள மாநிலத்தில் பிரபல ஹோட்டலில் பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தில் கோழிக்கோடு நகரின் மையப்பகுதியில் ஒரு பிரபல ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு இந்த ஹோட்டலுக்கு தம்பதியர் ஒருவர் உணவு சாப்பிடுவதற்காக சென்றுள்ளனர். சாப்பிட்டு முடித்த பிறகு அந்தப் பெண் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது ஜன்னல் அருகே வெள்ளை காகிதத்தில் ஏதோ ஒரு பொருள் வைக்கப்பட்டு இருந்ததை கவனித்த அந்த பெண் உடனே அதை திறந்து பார்த்தார். அப்போது அதில் ஒரு செல்போன் கேமரா ஆன் செய்யப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதுபற்றி தனது கணவரிடம் கூறியுள்ளார். இதையடுத்து அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் கழிப்பறையில் கேமராவை வைத்தது குறித்து அந்த ஓட்டலில் பணிபுரியும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது மேற்கு வங்கத்தை சேர்ந்த துபைல் (23) என்பவர் தெரியவந்தது. விசாரணைக்குப் பிறகு துபைலை போலீசார் கைது செய்து கோழிகூடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.