தமிழகத்தில் ஹோட்டலில் உணவு விலை 10 சதவீதம் வரை உயர்த்த பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் சாமானிய மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் தினம்தோறும் புதிய புதிய தகவல் வெளியாகி கொண்டு உள்ளது. தினமும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டுள்ளது. மாதம் ஒருமுறை கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் காய்கறி, சமையல் எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்து வருகின்றது.தங்கம் வாங்குவதில் சிரமம் இருக்கிறது. தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் டீ, காபி விலை கூட உயர்ந்து விட்டது.
இதற்கு முன்னர் பத்து ரூபாயில் இருந்த டீயின் விலை தற்போது 12 ரூபாயாகவும், காபி விலை 12 ரூபாயிலிருந்து 15 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. ஏனெனில் வணிக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஹோட்டல் உணவுகளின் விலை உயர்த்தப்பட்ட உள்ளதாக ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி உணவு விலை 10% முதல் 20% வரை உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த விலை உயர்வு பிரச்சினைக்கு எப்போது முடிவு கிடைக்கும் என்று பொதுமக்கள் எதிர்பாத்து காத்துள்ளனர்.