Categories
மாநில செய்திகள்

ஹோட்டல் சாப்பாட்டுக்கு ஆசைப்படாதே…. எகிறியது சிலிண்டர் விலை….!!!!

வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 101 ரூபாய் அதிகரித்து 2,234 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

கடந்த மாதம் வீட்டு பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு சிலிண்டர் விலை 101 ரூபாய் அதிகரித்து, 2,234 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாடு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஓராண்டில் 770 ரூபாய் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை 101 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து இருக்கிறது. இதனால் ஹோட்டல்களில் உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |