ஹோட்டல் நடத்தி வரும் செய்தியை பேட்டியில் பகிர்ந்துள்ளார் கிரேஸ்.
பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் கருணாஸ். இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவரின் மனைவி பின்னணி பாடகி கிரேஸ். 2004 ஆம் ஆண்டு பாடல் பாடத் தொடங்கிய கிரேஸ் அண்மைக்காலமாக பெரிதாக பாடல் பாடுவது இல்லை. இவர் தற்போது சின்னத்திரையில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகின்றார். மேலும் இவர் தற்போது ஒளிபரப்பாகி வரும் குக்கு வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற கிரேஸ் கூறியுள்ளதாவது, ஹோட்டல் நடத்தலாம் என்பது எங்களை விட கருணாஸிற்கு தான் ஆர்வம் அதிகம். ஆரம்பத்தில் நாங்கள் வடபழனியில் லொடுக்கு பாண்டி என்ற ஹோட்டலையும் ஸ்ரீபெரும்புதூரில் திண்டுக்கல் சாரதி என்ற ஹோட்டலையும் பின் ரத்தன விலாஸ் என்ற ஹோட்டலையும் நடத்தி வருகிறோம். கருணாஸிற்கு ஆரம்பத்திலிருந்தே சினிமாவுக்கு அடுத்ததாக வேறு ஒரு தொழிலை செய்ய வேண்டும் என்கின்ற ஆர்வம் இருக்கின்றது. அது ஹோட்டல் என்பதிலும் அவர் உறுதியாக இருக்கின்றார் என கூறியுள்ளார் கிரேஸ்.