Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஹோட்டல் பீட்ரூட் பொரியலில் எலி தலை…. எப்படி வந்தது….? அதிர்ந்து போன வாடிக்கையாளர்….!!!!!

சமீப காலமாகவே ஒரு சில ஹோட்டல்களில் சாப்பாடு தரமற்றதாக உள்ளதாகவும் சாப்பாட்டில் பல்லி, தவளை, பூச்சிகள் கிடப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள சைவ உணவகம் ஒன்றில் துக்க நிகழ்வுக்கு வாங்கிச் சென்ற சாப்பாட்டில் எலி தலை இருந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பாலாஜி பவன் என்ற சைவ உணவகத்தில் சாப்பாட்டுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டிருந்தது.

அந்த ஓட்டலில் இருந்து அனுப்பப்பட்ட சாப்பாட்டில் பீட்ரூட் பொரியலில் எலித் தலை இருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து ஒட்டலில் முறையிட்ட போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களை சமரசம் செய்து அந்த உணவை உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் கொடுத்து பரிசோதனை செய்யுமாறு கேட்டுக் கொண்டனர்.

Categories

Tech |