Categories
தேசிய செய்திகள்

ஹோட்டல் ரூமில் இளம்பெண் சடலம்…. இறந்தது எப்படி?… மாட்டிக் கொண்ட காதலன்…. பரபரப்பு…..!!!!!

பொறியியல் கல்லூரி மாணவியை ஹோட்டல் அறையில்வைத்து காதலன் கொலைசெய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மைசூர் ஹுன்சூர் சாலையில் இச்சம்பவம் அரேங்கேறியுள்ளது. பெரியபட்னா தாலுக்காவிலுள்ள ஹரலஹள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் அபூர்வா ஷெட்டி(21). இவர் அருகிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார். இதனால் இவர் விடுதி ஒன்றினை எடுத்து தங்கியுள்ளார். சென்ற ஆகஸ்ட் 29 ஆம் தேதி அபூர்வாவும், அவரது காதலன் ஹின்கல் பகுதியைச் சேர்ந்த ஆஷியும் அங்குள்ள ஒரு ஹோட்டலில் அறை புக் செய்துள்ளனர்.

இதையடுத்து செப்டம்பர் 1ஆம் தேதி காலை அறையை விட்டு வெளியே சென்ற ஆஷி, பல மணிநேரம் கடந்தும் திரும்பாததால் ஹோட்டல் ஊழியர்கள் சந்தேகமடைந்துள்ளனர். இதன் காரணமாக ஊழியர்கள் இண்டர்காம் வாயிலாக அறையைத் தொடர்புகொள்ள முயன்றும் எந்த பதில் இல்லாத நிலையில், காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பின் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அறையை திறந்து பார்த்தபோது, ​​அபூர்வா சடலமாக கிடந்தார். கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் மூக்கிலிருந்து ரத்தம் வழிந்திருந்தது.

அதனை தொடர்ந்து ஆஷி கைது செய்யப்பட்டார். அபூர்வா மற்றும் ஆஷி இடையிலான காதல் உறவை அறிந்த அபூர்வாவின் குடும்பத்தினர் ஒருவரை ஒருவர் சந்திக்க வேண்டாம் என எச்சரித்துள்ளனர். எனினும் ஒருவரை ஒருவர் சந்தித்தனர். இந்த நிலையில் இருவருக்கும் இடையே என்ன நடந்தது என்று தெரியாததால் காவல்துறையினர் காதலனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |