Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஹோட்டல் ஸ்டைலில்…சப்பாத்தி குருமா ரெசிபி…!!

கேரட் குருமா  செய்ய  தேவையான பொருட்கள்:

கேரட்                                                       -கால் கிலோ (நறுக்கியது)
வெங்காயம்                                         -ஒன்று (பொடித்தது)
தக்காளி                                                  -1 (பொடித்தது)
தேங்காய்                                               -அரை கப்
பூண்டு                                                      – 4 பல்
கசகசா                                                     – ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள்                                           -அரை டீஸ்பூன்
தனியாத்தூள்                                        – அரை டீஸ்பூன்
பச்சை பட்டாணி                                  – ஒரு கையளவு
பச்சை மிளகாய்                                  – 4
எண்ணெய்                                             -ஒரு குழிக்கரண்டி
கருவேப்பிலை                                      -ஒரு கொத்து
கொத்தமல்லி                                          -ஒரு பிடி
பட்டை, கிராம்பு, ஏலக்காய்              -தலா 2
சோம்பு                                                           -ஒரு டீஸ்பூன்
உப்பு                                                              -2 டிஸ்பூன்
இஞ்சி                                                           – அரை துண்டு

செய்முறை:

முதலில் மிக்ஸி ஜாரில் நறுக்கிய அரை கப் தேங்காயுடன், 4 பச்சை மிளகாய், அரைத் துண்டு இஞ்சி, 4 பல் பூண்டு, அரை டீஸ்பூன், கசகசா ஆகியவற்றை சேர்த்து மையாக அரைத்து எடுத்து வைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கருவேப்பிலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு சிறிதளவு சேர்த்து தாளிக்கவும்.

அதனுடன் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு நன்கு வதங்கியதும் தனியா தூள், தக்காளியை போட்டு வதக்கவும்.

வதங்கியதும்அதனுடன் கால் கிலோ நறுக்கிய கேரட்டையும் சேர்த்து கிளறி, மேலும் அரைத்து வைத்த தேங்காய், பச்சைமிளகாய் ,இஞ்சி என அனைத்தையும் சேர்த்து கிளறவும்.

அதனை தொடர்ந்து தேவையான அளவு உப்பு மற்றும் 2 டீஸ்பூன்  மஞ்சள் தூள், 2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

இறுதியில் பச்சை பட்டாணியை சேர்த்து நன்கு கெட்டியானதும் கொத்தமல்லியை தூவி இறக்கினால் சுவையான கேரட் குருமா தயார்.

Categories

Tech |