ஹோட்டல் ஸ்டைல் சிக்கன் ஃபார்சா செய்வது எப்படி என்பதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:
போன்லெஸ் சிக்கன் – 250 கிராம் (தோல் நீக்கியது)
மசாலா தயாரிக்க தேவையானவை:
எலுமிச்சை சாறு – 2 மேஜைக்கரண்டி
பூண்டு விழுது – 1 மேஜைக்கரண்டி
இஞ்சி விழுது – 1 மேஜைக்கரண்டி
மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
மல்லித் தூள் – 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா – 1 மேஜைக்கரண்டி
மிளகு தூள் – 1/2 தேக்கரண்டி
சுவைக்க – உப்பு
கோட்டிங் செய்ய தேவையானவை:
பிரெட் க்ரம்ப் – 1/2 கப்
முட்டை – 2
மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
எண்ணெய் – வறுக்க
செய்முறை:
முதலில் சிக்கனை சுத்தம் செய்து நன்கு கழுவி கொள்ளவும். முக்கியமாக, அதில் ஒவ்வொரு சிக்கன் துண்டுகளும் 50 கிராம் அளவு இருக்க வேண்டும்.
ஒரு பௌலில் மசாலா பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு கலந்து வைத்து கொள்ளவும். பின் மசாலா கலவையை சிக்கனில் தடவி 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
அதேநேரம் மற்றொரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி, அதில் மிளகாய் தூள் சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து, அதில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.
தொடர்நது, மசாலா தடவிய சிக்கனை எடுத்து பிரெட் க்ரம்ப் மற்றும் முட்டையில் தொட்டு எடுத்து, அதனை எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து சட்னியுடன் பரிமாறவும்.